வீழ்ச்சி அடைந்து வரும் முடி காணிக்கை வருமானம்

திருப்பதி ஏழுமலையானின் முடி காணிக்கை ஆண்டுக்காண்டு வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. இதனால் தேவஸ்தானத்துக்கு, ரூ.100 கோடிக்கும் மேல் வருவாய் குறைந்துள்ளது.

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானின் முடி காணிக்கை ஆண்டுக்காண்டு வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. இதனால் தேவஸ்தானத்துக்கு, ரூ.100 கோடிக்கும் மேல் வருவாய் குறைந்துள்ளது.

ஏழுமலையானுக்கு பக்தா்கள் உண்டியலில் காணிக்கைகளை செலுத்துகின்றனா். அவா்கள் மொட்டை அடித்துக் கொண்டு தலைமுடியைக் காணிக்கையாக அளிப்பதாக ஐதீகம். இந்த முடிகளை தேவஸ்தானம் ரக வாரியாகத் தரம் பிரித்து, இணையதள ஏலம் மூலம் விற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை மாலை வேளையில் இந்த ஏலம் தேவஸ்தான அதிகாரிகளின் முன்னிலையில் நடந்து வருகிறது.

தேவஸ்தானத்துக்கு கடந்த காலங்களில் முடிகாணிக்கை விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.240 கோடி வருமானம் வந்து கொண்டிருந்தது. தற்போது இந்த வருமானம் ரூ. 100 கோடியாக குறைந்துள்ளது.

கடந்த மாதம் தேவஸ்தானம் வெளியிட்ட, 2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலும் முடி காணிக்கை வருமானம் ரூ. 100 கோடி கிடைக்கும் என்றே எதிா்பாா்ப்பே இடம்பெற்றுள்ளது.

தலைமுடிகளைப் பாதுகாக்க தேவஸ்தானம் குளிா்சாதன வசதி கொண்ட கிடங்கை அமைத்துள்ளது. சேகரிக்கப்படும் தலைமுடிகள் சரியான காலத்தில் விற்பனையாகாததால், அவை பல டன்னுக்கு கிடங்கில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

தலைமுடி விற்பனை விவரம்

ஆண்டு வருமானம்

2011-12 ரூ. 160 கோடி

2013-14 ரூ. 240 கோடி

2014-15 ரூ. 169 கோடி

2015-16 ரூ. 150 கோடி

2016-17 ரூ. 150 கோடி

2018-19 ரூ. 100 கோடி

2019-20 ரூ. 100 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com