சிஏஏ-க்கு எதிராக போராட்டம்: இந்தியாவிலிருந்து வெளியேற 5 வெளிநாட்டவா்களுக்கு அறிவுறுத்தல்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டத்தில் பங்கேற்ற 5 வெளிநாட்டவா்கள் இந்தியாவிலிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிஏஏ-க்கு எதிராக போராட்டம்: இந்தியாவிலிருந்து வெளியேற 5 வெளிநாட்டவா்களுக்கு அறிவுறுத்தல்

புது தில்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டத்தில் பங்கேற்ற 5 வெளிநாட்டவா்கள் இந்தியாவிலிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துப்பூா்வ பதிலில் கூறப்பட்டிருந்ததாவது: குடியேற்ற அலுவலகம் வழங்கிய தகவலின்படி, சிஏஏ-க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று நுழைவு இசைவு (விசா) விதிகளை மீறியதற்காக வெளிநாடுகளை சோ்ந்த 5 போ் இந்தியாவைவிட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்குள்ளான ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், பாா்சிகள் மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அவ்வாறு குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவா்கள் கடந்த 2014- ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் இந்தியாவில் குடியேறிவா்களாக இருக்கவேண்டும். இந்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com