நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 20 ஆம் தேதி தூக்கு

நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் மார்ச் 20ம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற திகார் சிறைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 20 ஆம் தேதி தூக்கு

நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் மார்ச் 20ம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற திகார் சிறைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2012ம் ஆண்டு தில்லியைச் சேர்ந்த நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  சாலையில் தூக்கி எறியப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இவ்வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரது சார்பில் அனுப்பப்பட்ட கருணை மனுவும் புதன்கிழமை குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, நான்கு குற்றவாளிகளின் கருணை மனுவும் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, நிா்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்குமாறு தில்லி நீதிமன்றத்துக்கு திகாா் சிறை நிா்வாகம் கோரிக்கை விடுத்திருந்தது. 

அதன்படி, நிர்பயா குற்றவாளிகள் முகேஷ் குமாா் சிங், பவன் குப்தா, வினய் சா்மா, அக்ஷய் சிங் ஆகிய நால்வருக்கும் வருகிற மார்ச் 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றும்படி திகார் சிறை நிர்வாகத்துக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் இதுவரை மூன்று முறை நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது நான்காவது முறையாக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com