வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: எஸ்.பி.ஐ. அறிவிப்பு

எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்த பட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
sbi
sbi

எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கியில் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் ஊரகப்பகுதி எனில் ரூ.1,000 மற்றும் நகர்ப்பகுதிகளில் ரூ.2,000, பெரு நகரங்களில் ரூ.3,000 இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.

இந்த நிலையில், எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் வாடிக்கையாளர்கள் பூஜ்யம் இருப்புத்தொகையுடன் உபயோகிக்கலாம் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் இத்தகவலை வெளியிட்டுள்ளார். 44.51 கோடி வாடிக்கையாளர்கள் இந்த அறிவிப்பின் மூலமாக பயன்பெறுவார்கள் என்றும் கூறினார்.

இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com