அவரை எனக்கு கல்லூரி நாட்களில் இருந்தே தெரியும்..: சிந்தியா குறித்து ராகுல்

சிந்தியாவை எனக்கு கல்லூரி நாட்களில் இருந்தே தெரியும், அவர் அரசியல் எதிர்காலம் குறித்து சிந்தித்துள்ளார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அவரை எனக்கு கல்லூரி நாட்களில் இருந்தே தெரியும்..: சிந்தியா குறித்து ராகுல்


சிந்தியாவை எனக்கு கல்லூரி நாட்களில் இருந்தே தெரியும், அவர் அரசியல் எதிர்காலம் குறித்து சிந்தித்துள்ளார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகம் வெளியே இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

அவர் பேசியதாவது,

"ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்திருப்பது சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம். சிந்தியா தன்னுடைய சித்தாந்தத்தை சட்டைப் பையில் வைத்து ஆர்எஸ்எஸ்-இல் இணைந்துள்ளார். கல்லூரி நாட்களில் இருந்தே அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். சிந்தியாவுக்கு மாற்று சித்தாந்தமே உள்ளது. ஆனால், அவர் அரசியல் எதிர்காலம் குறித்து சிந்தித்துள்ளார். அவர் இணைந்துள்ள கட்சியில் அவருக்கு சௌகரியம் இல்லாமல் போகலாம்.

இது சித்தாந்தங்களுக்கு இடையிலான போர். ஒரு பக்கம் காங்கிரஸ், மறுபக்கம் பாஜக - ஆர்எஸ்எஸ்.

பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். மோடி அரசால் இந்தியப் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது. நாம் தற்போது பார்த்திருப்பது சுனாமியின் தொடக்கம்தான். நிலைமை இன்னும் மோசமாகும். பொருளாதாரம் குறித்து பிரதமர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குப் பொருளாதாரமே புரியவில்லை.

கரோனா வைரஸ் இந்தியப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. ஆனால், இது மிகவும் தாமதம். சேதங்களைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com