கேரளத்தைப் பின்னுக்குத் தள்ளியது மகாராஷ்டிரம்: 26 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி

மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) ஒருநாள் மட்டும் 9 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
கேரளத்தைப் பின்னுக்குத் தள்ளியது மகாராஷ்டிரம்: 26 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி


மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) ஒருநாள் மட்டும் 9 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 10 பேர் புணேவிலும், 5 பேர் மும்பையிலும், 4 பேர் நாக்பூரிலும், 2 பேர் யவத்மலிலும், நேவி மும்பை, கல்யாண், தாணே, பன்வேல் மற்றும் அகமது நகர் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து திரும்பியவர்கள். பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சராசரி வயது 40.

இதன்மூலம், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. இதன்மூலம், இந்தியாவில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் கேரளத்தைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது மகாராஷ்டிரம்.

இந்நிலையில், மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவிக்கையில், "மாநிலத்தில் உள்ள அனைத்து வணிக வளாகங்களும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படும். வெளிநாட்டில் இருந்து ஒருவர் நேற்று வந்தார். அவர் இன்று புல்தானா மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்தார். கரோனா வைரஸ் காரணமாகத்தான் இவர் உயிரிழந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. அவருடைய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்" என்றார்.

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மகாராஷ்டிர அரசு ஏற்கெனவே மாநிலம் முழுவதும் அனைத்து மதம் சார்ந்த மற்றும் பொது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டது. அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மார்ச் மாதம் முழுவதும் மூடுமாறு இன்று அறிவிக்கை வெளியிட்டது. அதேசமயம், தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com