Enable Javscript for better performance
Coronavirus can not spread through dead bodies, says Delhi AIIMS Director Randeep Guleria- Dinamani

சுடச்சுட

    

    இறந்தவர்களின் உடல்கள் வழியாக கரோனா வைரஸ் பரவாது: எய்ம்ஸ் இயக்குநர்

    By DIN  |   Published on : 14th March 2020 06:19 PM  |   அ+அ அ-   |    |  

    AIIMS Director Randeep Guleria


    கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை தகனம் செய்ய மயானம் மறுப்பு தெரிவித்ததையடுத்து, இறந்தவர்களின் உடல்களில் இருந்து கரோனா வைரஸ் பரவாது என தில்லி எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.

    கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 69 வயது பெண், தில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஏற்கெனவே சர்க்கரை நோயும், ரத்தக் கொதிப்பும் இருந்த அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

    இதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை அவரது குடும்பத்தினர் சனிக்கிழமை தகனம் செய்ய முற்பட்டனர். ஆனால், கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அவரது உடலை தகனம் செய்ய நிகம்போத் மயானத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதன்பிறகு, இதுதொடர்பாக தில்லி மாநகராட்சி அலுவலர்கள் தொடர்பு கொள்ளப்பட்டனர்.

    இதையடுத்து, ராம் மனோகர் லோகியா மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தில்லி மாநகராட்சி நிர்வாகிகள் சார்பில் இறந்தவரின் உடலில் இருந்து கரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கான வழிமுறைகள் பகிரப்பட்டன. இதன்பிறகு, எரிவாயு தகன மேடை மூலம் அந்தப் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இறந்தவர்களின் உடல்கள் வழியாக கரோனா வைரஸ் பரவாது என தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, அவர் தெரிவித்ததாவது,

    "இறந்தவர்களின் உடல்கள் வழியாக கரோனா வைரஸ் பரவாது. சுவாச சுரப்புகள் மூலமே அது பரவுகிறது. வைரஸ் பரவலுக்கு இருமல்தான் முக்கியமானது. எனவே, பாதிக்கப்பட்ட உடல்களை தகனம் செய்வது ஆபத்தானதல்ல" என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai