தேசிய பேரிடராக அறிவிப்பு: இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமை மதியம் நிலவரப்படி, நாட்டில் 85 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேசிய பேரிடராக அறிவிப்பு: இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு

புது தில்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமை மதியம் நிலவரப்படி, நாட்டில் 85 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக கேரளத்தில் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இவர்களில் 3 பேர் குணமடைந்துவிட்டனர்.

இதற்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிரம் உள்ளது. இங்கு 19 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியில் 6 பேருக்கும், ஹரியாணாவில் 15 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 11 பேருக்கும் கரோனா பாதிப்பு உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் இந்தியர்கள், ஒருவர் வெளிநாட்டினர்.

கர்நாடகாவில் ஏழு பேருக்கும், ராஜஸ்தானில் ஒரு இந்தியர், இரண்டு வெளிநாட்டவர் என மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது.

தெலங்கானா, தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவருக்கு கரோனா உள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒருவருக்கும், லடாக் யூனியன் பிரதேசத்தில் மூவருக்கும் கரோனா பாதிப்பு உள்ளது.

கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் என்று கடந்த புதன்கிழமை உலக சுகாதார அமைப்பு அறிவித்த நிலையில், இன்று, தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து ஆயிரத்தை எட்டியது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com