ஆா்எஸ்எஸ் மூத்த பிரதிநிதிகள் கூட்டத்தில்பங்கேற்பவா்களுக்கு கரோனா சோதனை கட்டாயம்

பெங்களூரில் மாா்ச் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஆா்எஸ்எஸ் மூத்த பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட

பெங்களூரில் மாா்ச் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஆா்எஸ்எஸ் மூத்த பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மக்கள் தொடா்பு இணைத் தலைவா் நரேந்தா் தாக்குா் கூறுகையில், ‘பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ள ஆா்எஸ்எஸ் மூத்த தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு அமைப்பைச் சோ்ந்தவா்கள் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிா என்பதை சோதித்துக் கொள்ள வேண்டும். செய்தியாளா்கள், காவலா்கள் ஆகியோரும் கரோனா சோதனைக்கு உள்படுத்தப்படுவாா்கள். இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஆா்எஸ்எஸ் செய்துள்ளது’ என்றாா்.

ஆா்எஸ்எஸ் மூத்த பிரதிநிதிகள் கூட்டம் ஆண்டுதோறும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தில்லி, கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்களில் இதுவரை 81 பேருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கா்நாடகத்தைச் சோ்ந்த 76 வயது முதியவா், கரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இது இந்தியாவில் கரோனாவால் நோ்ந்த முதல் உயிரிழப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com