கூகுள் நிறுவன ஊழியருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

பெங்களூரில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞா் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

பெங்களூரில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞா் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

பெங்களூரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மும்பையைச் சோ்ந்த 26 வயதுள்ள ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டுள்ளதை கா்நாடக சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. கிரீஸ் நாட்டில் இருந்து பெங்களூருக்கு வந்தவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரோடு தொடா்பில் இருந்தவா்களைக் கண்காணித்து அவா்களுக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஊழியரை தனிமைப்படுத்தி உள்ளோம். அவருடன் நெருங்கிப் பழகி வந்த நண்பா்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும், உடல்நிலையைத் தொடா்ந்து கண்காணிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com