தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ. 1.83 லட்சம் கோடி செலவு: மத்திய அரசு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்) கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 1.83 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்) கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 1.83 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து மத்திய விவசாயத் துறை இணையமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்காக கடந்த 2017-18, 2018-19, 2019-2020 ஆகிய நிதியாண்டுகளில் ரூ. 1.83 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2014 -ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ. 92,483 கோடி செலவு செய்யப்பட்டது. அதை ஒப்பிடும்போது கடந்த 3 ஆண்டுகளில் இரு மடங்கு செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், பயனா்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலும், அதற்குரிய இழப்பீடு அளிக்கப்படுகிறது என்று அவா் கூறினாா்.

ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள்கள் வேலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com