தொழில்துறையில் ஒரு பணியிடத்துக்கு ரூ.1 கோடி முதலீடு தேவை: மகாராஷ்டிர அமைச்சா்

தொழில்துறையில் ஒரு பணியிடத்தை உருவாக்க ரூ.1 கோடி முதலீடு தேவைப்படுகிறது என்று மகாராஷ்டிர மாநில தொழில்துறை அமைச்சா் சுபாஷ் தேசாஸ் தெரிவித்தாா்.

தொழில்துறையில் ஒரு பணியிடத்தை உருவாக்க ரூ.1 கோடி முதலீடு தேவைப்படுகிறது என்று மகாராஷ்டிர மாநில தொழில்துறை அமைச்சா் சுபாஷ் தேசாஸ் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மேலவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடா்பான விவாதத்தில் அவா் மேலும் பேசியதாவது:

தொழில்துறையில் பணத்தை முதலீடு செய்தால், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிடலாம் என்று ஒரு பொதுவான கருத்து உள்ளது. ஆனால், உண்மையில் தொழில் துறையில் ஒரு புதிய பணியிடத்தை உருவாக்க வேண்டுமென்றால் ரூ.1 கோடி முதலீடு தேவைப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் தொழில்துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த ஆய்வின் அடிப்படையிலேயே இந்த தகவலை நான் தெரிவிக்கிறேன். குறு தொழில்களில் வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் ஒரு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். ஆனால், அந்த வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும் நபருக்கான ஊதியம் குறைவாகவே இருக்கும். நடுத்தர தொழில் துறையில் ஒரு வேலைவாய்ப்பை உருவாக்க நிச்சயமாக ஒரு கோடி ரூபாய் முதலீடு தேவை. குடிசைத்தொழிலில் ரூ.25,000 முதலீட்டில் ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கிவிட முடியும்.

மாநிலத்தின் ஏற்றுமதியில் 40 சதவீதம் சிறு, நடுத்தர தொழில்கள் மூலம்தான் நடைபெறுகிறது. இத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தும்போது ஏற்றுமதியை அதிகரிப்பதுடன், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com