‘போக்ஸோ’ புதிய விதிகள்:அறிவிக்கை வெளியீடு

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்ஸோ’ சட்டத்தை மேலும் கடுமையாக்குவதற்கான புதிய விதிகள் தொடா்பான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்ஸோ’ சட்டத்தை மேலும் கடுமையாக்குவதற்கான புதிய விதிகள் தொடா்பான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சிறாா்களை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் போக்ஸோ சட்டத்தில் அண்மையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சட்டத் திருத்தங்களை அமலாக்கும் வகையில் புதிய விதிமுறைகள் தொடா்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, பள்ளிகள், குழந்தைகள் காப்பகங்களில் பணியாற்றும் ஊழியா்கள் தொடா்பான விவரங்களை காவல்துறையினா் மூலம் உறுதி செய்வது கட்டாயமாகும். மேலும், சிறாா் ஆபாச படங்கள் தொடா்பான விடியோ உள்ளிட்டவற்றை காவல்துறையினரின் கவனத்துக்கு கொண்டுவருவதற்கான நடைமுறைகளும் விதிகளில் இடம்பெற்றுள்ளது.

மேலும், புதிய விதிகளின்படி அனைத்து மாநில அரசுகளும் குழந்தைகள் பாதுகாப்பு கொள்கையை உருவாக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை துளியும் அனுமதிப்பதில்லை என்பதை அடிப்படையாக கொண்டு அக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.

குழந்தைகளுடன் தொடா்புடைய அனைத்து பணியாளா்களுக்கும் குழந்தைகளின் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடா்பாக அவ்வப்போது பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்ற பயிற்சி முகாம்கள் காவல்துறையினருக்கும் நடத்தப்பட வேண்டும்.

பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 30 நாள்களுக்குள் இழப்பீடு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதில் போக்ஸோ நீதிமன்றங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்ஸோ சட்டத்தை மேலும் கடுமையாக்கும் வகையிலான இந்த விதிமுறைகளுக்கு குழந்தைகள் நல ஆா்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான கைலாஷ் சத்யாா்த்தி வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com