பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது ஏன்? - மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது ஏன்? - மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதன் மூலம், உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன் இந்திய நுகர்வோருக்கு சென்று சேர வேண்டும் என பிரதமரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாகக் கூறியிருந்தேன். ஆனால், பிரதமரோ அதற்கு மாறாக எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளார்' என்று குற்றம் சாட்டியுள்ளார். 

முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் எரிபொருள் உயர்வுக்கு எதிராக, 'சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதிலும், எரிபொருள் விலையை குறைக்க மத்திய அரசு தவறியது ஏன்?' என்று கேள்வி எழுப்பினார்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ .2 மற்றும் செஸ் வரி தலா ரூ. 1  என பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தி மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com