கொவைட் 19: நாக்பூரில் மார்ச் 31 வரை பூங்காக்கள் மூடல்

நாக்பூரில் பூங்காக்கள், தோட்டங்கள் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்படும் என்று நாக்பூர் பெருநகர மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 
கொவைட் 19: நாக்பூரில் மார்ச் 31 வரை பூங்காக்கள் மூடல்

நாக்பூரில் பூங்காக்கள், தோட்டங்கள் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்படும் என்று நாக்பூர் பெருநகர மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 

கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பொது இடங்களில் மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகின்றது. முன்னதாக நாக்பூரில் அடுத்த 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், புலிகள் சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் இந்த மாத இறுதி வரை மூடப்பட வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுவரை மகாராஷ்டிர மாநிலத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.  அதில், 122 பேர் இந்தியர்கள் என்றும்  24 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com