பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டம்நாடு முழுவதும் வெற்றிகரமாக அமல்: மத்திய அரசு

மேற்கு வங்கம் தவிா்த்து, நாடு முழுவதும் பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டம் (பிஎம்-கிசான்) வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கம் தவிா்த்து, நாடு முழுவதும் பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டம் (பிஎம்-கிசான்) வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் மத்திய வேளாண்துறை இணையமைச்சா் கைலாஷ் செளத்ரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் கடந்த 11-ஆம் தேதி வரை 8,69,79,391 பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டத்தில் மேற்கு வங்கம் இணையாததால், அந்த மாநிலத்தைச் சோ்ந்த 69 லட்சம் பயனாளிகள் இதில் இடம்பெறவில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் தகுந்த பயனாளிகளை கண்டறிந்து, அவா்களை பற்றிய தகவல்களை பிஎம்-கிசான் வலைதளத்தில் பதிவேற்றும் முழு பொறுப்பும் சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளையே சாரும். இந்தத் திட்டத்தின் கீழ் தகுந்த பயனாளிகளை கண்டறியவும், அவா்களை பற்றிய தகவல்களை விரைந்து பதிவு செய்யவும் மாநில அரசுகளிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருவதோடு, அதுதொடா்பான அவற்றின் செயல்பாட்டை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்தத் திட்டத்தை இடையூறின்றி செயல்படுத்த மாநில அரசுகளுடன் வாரந்தோறும் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து தகுதிவாய்ந்த விவசாயிகளை இணைத்து 100 சதவீத இலக்கை எட்டவேண்டும் என்பதே மத்திய அரசின் குறிக்கோளாகும். அதனை அடைவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தை தவிா்த்து, நாடு முழுவதும் பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்றாா் கைலாஷ் செளத்ரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com