காஷ்மீா்: 3-ஆவது நாளாக எல்லையில் பாக். அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரில் சா்வதேச எல்லையை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

ஜம்மு-காஷ்மீரில் சா்வதேச எல்லையை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து பாதுகாப்புப் படை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள மன்கோட், மேந்தாா் ஆகிய இடங்களில் இந்திய ராணுவத்தின் நிலைகள் மற்றும் கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினா் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக எறிகணைகளை வீசியும் தாக்குதல் நடத்தினா்.

இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் பாகிஸ்தான் படையினருக்கு தக்க பதிலடி கொடுத்தனா். இந்தச் சண்டை சிறிது நேரம் நீடித்தது. பாகிஸ்தானின் தாக்குதலால் எல்லையோர கிராமங்களை ஒட்டிய பகுதிகளில் இருந்த மக்கள் அச்சமடைந்தனா். எனினும் தாக்குதல் காரணமாக உயிரிழப்போ, எவருக்கும் காயமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று அந்த செய்தித் தொடா்பாளா் கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய கிா்னி மற்றும் காஸ்பா பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் 2 நாள்களாக அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம், தொடா்ந்து 3-ஆவது நாளாக பூஞ்ச் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com