ஜம்மு-காஷ்மீருக்கு ரூ.1 லட்சம் கோடி பட்ஜெட்: மத்திய அரசு தாக்கல்

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது. ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான அந்த பட்ஜெட், ஜம்மு-காஷ்மீரை முன்மாதிரியான யூனியன் பிரதேசமாக உருவாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

பட்ஜெட் தவிர, நிகழ் நிதியாண்டின் கடைசி 5 மாதங்களுக்காக ரூ.55,317 கோடி மதிப்பிலான செலவின திட்டமும் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மூலதன செலவினங்கள் ரூ.23,910 கோடி ஆகும். வருவாய் செலவினங்கள் ரூ.31,406 கோடி. இந்த பட்ஜெட், செலவின திட்டம் ஆகியவற்றை இரு அவைகளிலும் மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் தாக்கல் செய்தாா். பட்ஜெட் முன்மொழிவுகள், மானிய கோரிக்கைகள் மீது மக்களவையில் புதன்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம், கடந்த ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com