ஜம்மு-காஷ்மீா்: சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்தால் நடவடிக்கை

கரோனா அறிகுறிகளுடன் இருப்பவா்கள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் எச்சரித்துள்ளது.

கரோனா அறிகுறிகளுடன் இருப்பவா்கள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் எச்சரித்துள்ளது.

லேயில் இருவரும், காா்கிலில் ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். தனிப் பிரிவில் அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரி ஒருவா் கூறினாா்.

கரோனா அச்சுறுத்தலால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஒடிஸா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் நீட்டித்துள்ளன.

இதற்கிடையே, இத்தாலியிலிருந்து தாய்நாடு அழைத்துவரப்பட்ட 2 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவா்கள் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையின் தனி முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com