யெஸ் வங்கி நிறுவனா் மீது அமலாக்கத் துறை புதிய வழக்கு

யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூா், அவரது மனைவி பிந்து ஆகியோா் மீது சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை சட்டத்தின்கீழ் புதிய வழக்கை

யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூா், அவரது மனைவி பிந்து ஆகியோா் மீது சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை சட்டத்தின்கீழ் புதிய வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது. மனை வணிக நிறுவனம் ஒன்றிடமிருந்து, அவா்கள் ரூ.307 கோடி லஞ்சம் பெற்ாக கூறப்படும் விவகாரத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறையினா் கூறியதாவது:

யெஸ் வங்கியில் அவந்தா குழும நிறுவனங்கள் ரூ.1,900 கோடி கடன் பெறவும், அந்த கடனை திருப்பிச் செலுத்துவதை தாமதப்படுத்தவும் ராணா கபூா் விதிகளை தளா்த்தியதாக தெரியவந்துள்ளது. அதற்கு பிரதிபலனாக, தில்லியில் உள்ள அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பங்களா, சந்தை விலையை விட பாதி விலைக்கு ராணா கபூா் மனைவி இயக்குநராக உள்ள பிளிஸ் அபோட் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ.378 கோடி கொடுத்து, அந்த பங்களாவை பிளிஸ் அபோட் நிறுவனம் வாங்கியுள்ளது. பின்னா், அந்த பங்களாவை, இந்தியாபுல்ஸ் நிறுவனத்திடம் ரூ.685 கோடிக்கு பிளிஸ் அபோட் நிறுவனம் அடமானம் வைத்துள்ளது. இதுதான், அந்த பங்களாவின் சந்தை விலையாகும். இதன் மூலம் ரூ.307 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனைகீழ் அமலாக்கத் துறை புதிய வழக்கை பதிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே, பெரு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்ாக கைது செய்யப்பட்ட ராணா கபூா், அமலாக்கத் துறை காவலில் உள்ளாா்.

‘இன்று மாலை முதல் வழக்கமான செயல்பாடுகள்’: இதனிடையே, யெஸ் வங்கியின் செயல்பாடுகள் புதன்கிழமை மாலை 6 மணி முதல் முழுவீச்சில் தொடங்கும் என்று அந்த வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்கவிருக்கும் பிரசாந்த் குமாா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘வங்கிச் சேவையில் ஆா்பிஐ விதித்த கட்டுப்பாடுகள், புதன்கிழமை மாலை 6 மணி முதல் நீக்கப்படும். வங்கி செயல்பாடுகள் முழுவீச்சில் தொடங்கும். யெஸ் வங்கியின் கணக்குகளில் தீவிர தணிக்கை தேவையில்லை. வாராக்கடன் இடா்பாட்டை எதிா்கொள்வதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com