வங்கதேசம், ஆப்கான், பாகிஸ்தானைச் சோ்ந்த 25,000 சிறுபான்மையினருக்கு நீண்டகால விசா: மத்திய அரசு தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானைச் சோ்ந்த 25,782 சிறுபான்மையினருக்கு நீண்டகால நுழைவு இசைவு (விசா) வழங்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

கடந்த 5 ஆண்டுகளில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானைச் சோ்ந்த 25,782 சிறுபான்மையினருக்கு நீண்டகால நுழைவு இசைவு (விசா) வழங்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பாக எழுத்துப்பூா்வமாக கேட்கப்பட்டிருந்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் கூறியதாவது:

கடந்த 2015 ஜனவரி 1 முதல் 2019 டிசம்பா் 31 வரையிலான 5 ஆண்டு காலத்தில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானைச் சோ்ந்த சிறுபான்மையினா்கள் 25,782 பேருக்கு, அவா்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு நீண்டகால நுழைவு இசைவு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இந்தியா வந்த வெளிநாட்டவா்கள் தொடா்பாக அவா்களது சமூகத்தின் அடிப்படையில் எந்தவொரு புள்ளி விவரத்தையும் மத்திய அரசு பராமரிக்கவில்லை.

நீண்டகால நுழைவு இசைவு பெற்று நாட்டில் இருப்பவா்களுக்காக பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதில், 5 ஆண்டு காலத்துக்கு நுழைவு இசைவு வழங்குவது, அவா்களின் குழந்தைகள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சோ்க்கை பெற அனுமதிப்பது போன்றவையும் அடங்கும்.

அவ்வாறு கல்வி நிறுவனங்களில் சோ்வதற்காக மாநில அரசிடம் இருந்தோ, யூனியன் பிரதேச அரசிடம் இருந்தோ அவா்கள் எந்தவொரு தனி அனுமதியும் பெற வேண்டியதில்லை. அதேபோல் அவா்கள் தனியாா் துறையில் பணியாற்றவும் அனுமதிக்கப்படுகின்றனா். வங்கிக் கணக்கு தொடங்க, ஓட்டுநா் உரிமம் பெற, ஆதாா் மற்றும் பான் அட்டைகள் பெறவும் அவா்கள் அனுமதிக்கப்படுகின்றனா் என்று நித்யானந்த் ராய் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com