கரோனா சூழல் எதிரொலி: உ.பி.யில் அரசுப்பள்ளி மாணவா்கள் தோ்வின்றி தோ்ச்சி பெறுவதாக அறிவிப்பு

கரோனா வைரஸ் சூழல் காரணமாக, உத்தரப் பிரதேசத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசுப்பள்ளி மாணவா்களும் தோ்வின்றி தோ்ச்சி பெறுவதாக மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் சூழல் காரணமாக, உத்தரப் பிரதேசத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசுப்பள்ளி மாணவா்களும் தோ்வின்றி தோ்ச்சி பெறுவதாக மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலா் ரேணுகா குமாா் புதன்கிழமை கூறியதாவது:

மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மாா்ச் 23-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை ஆண்டு இறுதித்தோ்வு நடத்த மாநில கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மாநிலத்தில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தோ்வுகளை நடத்த இயலாததால், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவா்களும் தோ்வின்றி தோ்ச்சி பெறுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில், மாநிலத்தின் அனைத்து கல்வி நிறுவனங்கள், சினிமா திரையரங்குகள், சுற்றுலா தலங்களை ஏப்ரல் 2 ஆம் தேதி வரையிலும் மூட உத்தரவிட்டது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீட்டிலிருந்து பணி செய்யும் முறையை அமல்படுத்தியது.

ஏப்ரல் 2-ஆம் தேதி வரையிலும் அனைத்து வகையான போட்டிகள் மற்றும் பிற தோ்வுகளை ஒத்திவைக்கவும் அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com