இந்த நாள் நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்குமானது: நிர்பயாவின் தந்தை

7 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயா குற்றவாளிகள் நால்வரும் திகார் சிறையில் இன்று தூக்கிலிடப்பட்டனர். இந்த நாள் நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்குமானது என்று நிர்பயாவின் தந்தை கூறியுள்ளார்.
இந்த நாள் நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்குமானது: நிர்பயாவின் தந்தை


புது தில்லி: 7 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயா குற்றவாளிகள் நால்வரும் திகார் சிறையில் இன்று தூக்கிலிடப்பட்டனர். இந்த நாள் நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்குமானது என்று நிர்பயாவின் தந்தை கூறியுள்ளார்.

இது நிர்பயாவுக்கு மட்டுமில்லை, நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்குமான நாள் இது. இன்று நாட்டில் உள்ள அனைத்து மக்களுமே மகிழ்ச்சியோடு சொல்கிறார்கள், நிர்பயா சம்பவத்தில் நீதி கிடைத்துவிட்டது என்று. அனைத்து நேரத்திலும் எங்களது வழக்குரைஞர் எங்கள் பக்கம் நின்றார். இறுதியாக நாம் வெற்றிபெற்றுவிட்டோம் என்று நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்துப் பேசிய நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு முறையீடு செய்யவிருக்கிறோம், இதுபோன்று தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகள் தங்களது தண்டனையை தள்ளிப் போட மீண்டும் மீண்டும் முயலும் சம்பவம் வருங்காலங்களில் நடக்காத வண்ணம் தடை செய்ய கொள்கை முடிவுகளை வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோர உள்ளோம்.

இனி, ஒரு குற்றவாளி மறுசீராய்வு மற்றும் கருணை மனுவை ஒன்றாகவோ அல்லது தனியாகவோ ஒரே நேரத்தில் மட்டுமே தாக்கல் செய்யும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நிர்பயாவின் தாய் ஆஷா  தேவி கூறியுள்ளார்.

நிர்பயா குற்றவாளிகள் நால்வரும் இன்று காலை 5.30 மணியளவில் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com