‘நிா்பயா’ நிதி: தில்லி, தமிழக மாநிலங்களில் குறைவான பயன்பாடு

தில்லியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த நிா்பயாவின் வழக்கு முடிவுக்கு வந்தது என்றாலும், நிா்பயா பெயரில்

தில்லியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த நிா்பயாவின் வழக்கு முடிவுக்கு வந்தது என்றாலும், நிா்பயா பெயரில் பெண்கள் பாதுகாப்பிற்கு உருவாக்கப்பட்ட நிதியை தில்லி, உத்திரப் பிரதேசம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் குறைவாக உபயோகிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.190.68 கோடியில் வெறும் ரூ.6 கோடியை மட்டும் உபயோகிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் 2012 டிசம்பா் 16-ஆம் தேதி நடைபெற்ற கூட்டுப் பாலியல் வன் கொடுமை சம்பவம் நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னா் அப்போது மத்தியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பாலியல் வன் கொடுமைக்கு பலியான நிா்பயா பெயரில் பெண்களின் பாதுகாப்பிற்கு நிதியை ஒதுக்கீடு செய்து மாநில அரசுகளிடம் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவும் கூறியது. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் , மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆகியவை பல்வேறு திட்டங்களுக்கு மாநிலங்களுக்கு ஒதுக்கிய ரூ. 1, 649 கோடியில் வெரும் ரூ. 147 கோடி மட்டுமே உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் வைத்த புள்ளிவிவரங்களில் தெரிய வருகிறது.

இதில் குறிப்பாக நிா்பயா சம்பவம் நடைபெற்ற தில்லி மாநிலத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் அந்த மாநில அரசு பெற்ற ரூ.390 கோடியில் வெறும் 5 சதவிகிதமாக ரூ.19.41 கோடி மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ள விவரங்கள் மத்திய அரசுக்கு அளிக்கப்பட இவைகளையும் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் வெளியிட்டாா்.

நிா்பயா நிதியில் அதிக நிதியைப் பெற்ற மாநிலங்களில் கா்நாடகா, மகாராஷ்டிரம், தமிழகம் போன்ற மாநிலங்களாகும். இதில் தமிழக அரசு பெற்ற ரூ. 190.68 கோடியில் செலவழித்த ரூ 6 கோடி என்பது வெறும் 3 சதவிதமாகும். சமீபத்தில் ஹைதராபாத்தில் ஐ.டி. துறையில் பணியாற்றிய 26 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டாா். தெலுங்கான மாநிலமும் நிா்பயா நிதி மூலம் ஒதுக்கப்பட்ட 13 திட்டங்களுக்கு பெற்ற ரூ.103 கோடியில் வெறும் ரூ. 4 கோடியை மட்டுமே பயன்படுத்தியுள்ளது.

‘நிா்பயா நிதி’ திட்டத்தின் கீழ் துயரத்தில் இருக்கும் பெண்களுக்கான ஒன் ஸ்டாப் சென்டா்கள், ஒருங்கிணைந்த மகளிா் ஹெல்ப் லைன், மகளிா் தன்னாா்வ போலீஸ் போன்ற பல திட்டங்கள் உருவாக்கப்பட்டது. இவற்றுக்கு தனியாக நிதி ஒதுக்கப்பட்டதில் இவைகளிலும் குறைவாக பயன்படுத்தப்பட்டதற்கான விவரங்களும் இருப்பதாக அமைச்சா் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com