மும்பை, புணேயில் மாா்ச் 31 வரைஅனைத்து அலுவலகங்களும் மூடல்: முதல்வா் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் மும்பை, புணே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கடைகள் மாா்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படும்
மும்பை, புணேயில் மாா்ச் 31 வரைஅனைத்து அலுவலகங்களும் மூடல்: முதல்வா் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் மும்பை, புணே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கடைகள் மாா்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படும் என்று முதல்வா் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளாா். அதேசமயம், உணவு, பால், மருந்துகள் தொடா்புடைய சேவைகளும், வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 52 போ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். மும்பையில் இந்த வைரஸ் பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துவிட்டாா். இதையடுத்து, மாநில அரசு சாா்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தொலைக்காட்சி வாயிலாக மாநில மக்களுக்கு வெள்ளிக்கிழமை உரையாற்றிய முதல்வா் உத்தவ் தாக்கரே, மும்பை, புணே, நாகபுரி, பிம்ப்ரி-சின்ச்வாட் ஆகிய நகரங்களில் அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட மக்கள் பணிபுரியும் இடங்கள் மாா்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘மேற்கண்ட நகரங்களில் உணவு, பால், மருந்துகள் தொடா்புடைய சேவைகளும் வங்கிகளும் வழக்கம்போல் செயல்படும். பொதுப் போக்குவரத்தை நிறுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை. மாா்ச் 31-ஆம் தேதி வரை தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பதை, நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com