இந்தியாவில் 258 பேருக்கு கரோனா: 23 பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 258 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.
இந்தியாவில் 258 பேருக்கு கரோனா: 23 பேர் குணமடைந்தனர்


புது தில்லி: இந்தியாவில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 258 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

தற்போது மருத்துவமனைகளில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 219 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 39 பேர் வெளிநாட்டினர். பலி எண்ணிக்கை எண்ணிக்கை ஒரு வெளிநாட்டினர் உட்பட 5 பேர் மரணம் அடைந்துள்ளனர். தில்லி, கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் மரணம் அடைந்துள்ளனர்.

இது தவிர, மகாராஷ்டிரத்தில் 49 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் 33 பேருக்கும், தில்லியில் 25 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 23 பேருக்கும், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகத்தில் தலா 15 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ம.பி. மற்றும் ஜம்முவில் தலா 4 பேருக்கும், தமிழ்நாடு, உத்தரகாண்ட், ஆந்திரம், ஹரியாணா மாநிலங்களில் தலா 3 பேருக்கும் கரோனா பாதித்துள்ளது.

இது தவிர,  ஹிமாச்சல், பஞ்சாப், மேற்கு வங்கத்தில் தலா இருவருக்கும், சட்டீஸ்கர், புதுச்சேரி, சண்டீகர், மாநிலங்களில் தலா ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஹரியாணாவில் 144 தடை உத்தரவு
ஹரியாணாவில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com