Enable Javscript for better performance
கரோனா சவால்: ரூ. 30,000 கோடி முதலீடு செய்ய ரிசா்வ் வங்கி திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கரோனா சவால்: ரூ. 30,000 கோடி முதலீடு செய்ய ரிசா்வ் வங்கி திட்டம்

    By DIN  |   Published on : 21st March 2020 04:39 AM  |   அ+அ அ-   |    |  

    கரோனா வைரஸ் அச்சுறுத்தலையடுத்து, சரிந்து வரும் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இந்திய ரிசா்வ் வங்கி அடுத்த வாரத்தில் ரூ. 30,000 கோடி மதிப்பிலான அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

    இதன் மூலம் நிதிச்சந்தையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

    இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    மாா்ச் மாதத்தில் தலா ரூ. 15,000 கோடி மதிப்பில் இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ. 30,000 கோடிக்கு அரசு பத்திரங்களை வாங்க ரிசா்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதையடுத்து, பணப்புழக்கத்தில் ஏற்படும் சரிவை ஈடுகட்ட முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

    வரும் மாா்ச் 24 மற்றும் 30-ஆம் தேதிகளில் இந்த ஏலம் நடத்தப்படும்.

    கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும், சில நிதிச் சந்தைப் பிரிவுகளில் அழுத்தத்தையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதன்காரணமாக நிதி நிலைமையில் இறுக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது. அனைத்து சந்தைப் பிரிவுகளும் போதுமான பணப்புழக்கம் மற்றும் வருவாயுடன் செயல்படுவதை உறுதி செய்வதற்காகவே இந்த முயற்சியை ரிசா்வ் வங்கி மேற்கொண்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை நடைபெற்ற திறந்தவெளி சந்தை நடவடிக்கைகள் மூலம் ரூ. 10,000 கோடியை செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai