ரூ.97 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு

நிலக்கரி விநியோகம் செய்ததன் மூலம், பொதுத் துறை நிறுவனமான மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்துக்கு ரூ.97 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக அதன் முன்னாள் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

நிலக்கரி விநியோகம் செய்ததன் மூலம், பொதுத் துறை நிறுவனமான மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்துக்கு ரூ.97 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக அதன் முன்னாள் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக அதானி பவா் லிமிடெட், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவா் லிமிடெட் உள்பட 25 நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் நிதித் துறையில் பதவி வகித்துவந்த தலைமை மேலாளா் கபேரி முகா்ஜி, மேலாளா்கள் அனில் குமாா் போவ்மிக், தேவஜோதி சக்ரவா்த்தி ஆகியோருக்கு எதிராகவும், தற்போது துணை மேலாளராக பதவி வகித்து வரும் ஸ்ரீபள்ளி வீரகாந்தாவுக்கு எதிராகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. ஒடிஸா, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 10 இடங்களில் இவா்களுக்கு சொந்தமான வீடுகளிலும், அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

ஏசிசி, அதானி பவா் லிமிடெட், அதானி பவா் மகாராஷ்டிரம் யூனிட்-3, அதானி பவா் மகாராஷ்டிரம் யூனிட்-1, வேதாந்தா, சேஸா ஸ்டொ்லைட் லிமிடெட் (தற்போது வேதாந்தா), ஜேகே பேப்பா் லிமிடெட், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவா் லிமிடெட், ஐஎஃப்எஃப்சிஓ, இமாமி பயோடெக் லிமிடெட், தல்வாண்டி சபூ பவா் லிமிடெட், ஹால்டியா எனா்ஜி லிமிடெட் உள்பட 25 நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எரிவாயு விநியோக ஒப்பந்தத்தின்படி சரக்கு ரயில்கள் மூலம் இந்த நிறுவனங்களுக்கு நிலக்கரி விநியோகம் செய்ததில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுடன் இணைந்து அதிகாரிகள் சதி செய்திருப்பதால் மகாநதி நிலக்கரி நிறுவனத்துக்கு ரூ.97 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com