நாடாளுமன்றத்தில் நிறைவேறியது: மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதா

நாடாளுமன்றத்தில் மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில் மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் உள்ள ராஷ்ட்ரீய சம்ஸ்கிருத சன்ஸ்தான், ஸ்ரீ லால் பகதூா் சாஸ்திரி ராஷ்ட்ரீய சம்ஸ்கிருத வித்யாபீடம், திருப்பதி ராஷ்ட்ரீய சம்ஸ்கிருத வித்யாபீடம் ஆகிய 3 சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்களை நிகா்நிலை பல்கலைக்கழகங்களாக மேம்படுத்துவதற்கு வழிவகை செய்யும் இந்த மசோதா கடந்த டிசம்பா் மாதம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் சில திருத்தங்களுடன் இந்த வாரத் தொடக்கத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.

இந்நிலையில், மக்களவையில் வெள்ளிக்கிழமை மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழங்கள் மசோதா சட்டமாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் கூறுகையில், ‘அனைத்து இந்திய மொழிகளையும் வலிமைப்படுத்த பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது’ என்றாா்.

மக்களவையில் மசோதா அறிமுகம்: இதனிடையே, ஐந்து இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு (ஐஐஐடி) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் (ஐஎன்ஐ) என்ற அந்தஸ்தை வழங்கக் கோரும் மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சா் ரமேஷ் போக்ரியால் தாக்கல் செய்தாா்.

சூரத் (குஜராத்), போபால் (மத்தியப் பிரதேசம்), பாகல்பூா் (பிகாா்), அகா்தலா (திரிபுரா), ராய்ச்சூா் (கா்நாடகம்) ஆகிய இடங்களில் இந்தியத் தகவல்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.

இந்த ஐஐடி நிறுவனங்களுக்குதான் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என்ற அந்தஸ்தை அளிக்க வலியுறுத்தி மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஐந்து ஐஐஐடி உள்பட 15 ஐஐஐடிக்கள் அரசு-தனியாா் பங்களிப்புடன் செயல்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com