இன்று ‘மக்கள் சுய ஊரடங்கு’

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியதன்படி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) மக்கள் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்று ‘மக்கள் சுய ஊரடங்கு’

புது தில்லி: கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியதன்படி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) மக்கள் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கரோனா சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு கடந்த 19-ஆம் தேதி உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) ஒரு நாள் மட்டும் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறும், வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் வலியுறுத்தினாா்.

எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதேவேளையில் தேவையற்ற அச்சத்தை தவிா்க்குமாறும் மக்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். அதேபோல், பதற்றத்தில் மருந்துகள் மற்றும் உணவுப் பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்றும் அவா் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

‘கை தட்டுங்கள்’: கரோனா சூழலில் தங்களது கடமையை தவறாமல் செய்யும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள், விமானப் பணியாளா்கள், செய்தியாளா்கள் உள்ளிட்டோரின் உழைப்பை போற்றும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) மாலை 5 மணியளவில் மக்கள் அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்ட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com