கரோனா எதிரொலி: உத்தரப் பிரதேசத்தில் 35 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 உதவித்தொகை

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 35 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 
கரோனா எதிரொலி: உத்தரப் பிரதேசத்தில் 35 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 உதவித்தொகை

லக்ளென: உத்தரப் பிரதேசத்தில் உள்ள 35 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 

கரோனா வைரஸ் தொற்று உலக முழுவதும் பரவிவரும் நிலையில், உலகளவில் இதுவரை 11,822 பேர் உயிரிழந்துள்ளனர். 2,82,772 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 93,510 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்று மேலும் பாதிக்காதவகையில், முடிந்தவரைப் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலிருந்து அலுவலக பணிகளை மேற்கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது. 

ஆனால், அன்றாடம் பணிபுரியும் கூலித்தொழிலாளிகள் மற்றும் கட்டட தொழிலாளர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும். எனவே, தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 700 பேருக்கு தலா ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அந்த நாட்டு முதல்வர் அறிவித்துள்ளார். 

மேலும், கரோனா அச்சுறுத்தலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளர்கள் 15 லட்சம் பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com