கரோனா பரவாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு ரூ.2,570 கோடி நிதி: நிர்மலா சீதாராமன்

கரோனா பரவாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு ரூ.2,570 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

புது தில்லி: கரோனா பரவாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு ரூ.2,570 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 291 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனா பரவாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு ரூ.2,570 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமையன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடுமுழுவதும் கரோனா பரவாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு ரூ.2,570 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் நகர பகுதிகளுக்கு ரூ.1,629 கோடியும், ஊரகப் பகுதிகளுக்கு ரூ.940 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது

அந்த நிதியில் தமிழகத்துக்கு ரூ.987.85 கோடி நிதி, ஆந்திராவுக்கு ரூ.1,301 கோடி, ஒடிசா - ரூ.186 கோடி மற்றும்  அருணாச்சல பிரதேசத்திற்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com