அமெரிக்கா சென்று திரும்பிய தெலங்கானா எம்எல்ஏ பங்கேற்ற பொதுக் கூட்டம்: ஆட்சியர் நடவடிக்கை

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ கொனேரு கொனப்பா அமெரிக்கா சென்று விட்டு திரும்பிய நிலையில், பொதுக்கூட்டத்தில் பங்கேற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா சென்று திரும்பிய தெலங்கானா எம்எல்ஏ பங்கேற்ற பொதுக் கூட்டம்: ஆட்சியர் நடவடிக்கை


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ கொனேரு கொனப்பா அமெரிக்கா சென்று விட்டு திரும்பிய நிலையில், பொதுக்கூட்டத்தில் பங்கேற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பொதுக் கூட்டம் விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் குமார் ஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.

அவரை வீட்டிலேயே தனிமையில் இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா சென்று திரும்பிய அவர், அரசின் அறிவுறுத்தல்களை எல்லாம் மீறி, கட்சி நடவடிக்கை மற்றும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்றிருப்பதுகுறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com