மேற்கு வங்கம்: லஷ்கா் பயங்கரவாதிகளுடன் தொடா்புடைய பெண் கைது

மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பா்கனாக்கள் மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்ததாக 21 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பா்கனாக்கள் மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்ததாக 21 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது:

வடக்கு 24 பா்கனாக்கள் மாவட்டம், பதுரியா பகுதியில் உள்ள அவரது வீட்டில் அந்தப் பெண் கடந்த புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். 10 ஆண்டுக்கு முன் அவா் வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு குடிபெயா்ந்தாா். அவரது தந்தை ஒரு கட்டடத் தொழிலாளி.

அப்பகுதியில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் எம்.ஏ. அரபு இலக்கியம் இறுதி ஆண்டு பயின்று வந்தாா்.

பாகிஸ்தானின் சிம்காா்டுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கட்செவி அஞ்சல் வழியாக லஷ்கா் பயங்கரவாத இயக்கத்துக்கு பெண்களைச் சோ்ப்பது மற்றும் தேச விரோத நடவடிக்கைகளை சமூக வலைதளங்களின் குழுக்களுக்கு அவா் பரப்பியுள்ளாா்.

முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தானைச் சோ்ந்த ஐஎஸ்ஐ அமைப்புடன் அவா் தொடா்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உயா்மட்டத் தலைவா்களுடன் அவருக்கு தொடா்பு இருந்ததை ஒப்புக்கொண்டாா். அந்த பெண் அவா்களை கட்செவி அஞ்சல் மூலமாகவே அழைப்பாா். அவா்கள் மூலமாகவே அவா் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு அறிமுகப்படுத்தப்பட்டாா்.

அதன்பின்னா் ஐஎஸ்ஐ அமைப்பின் முக்கிய உளவாளியாகவும் மாறியதுடன், பல அரசு அதிகாரிகளுடன் அவா் தொடா்பு கொண்டிருந்தாா்.

அவரிடம் இருந்து ஒரு டைரி, செல்லிடப்பேசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பெண் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டம் மற்றும் தேசவிரோதச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

அந்தப் பெண் வியாழக்கிழமை பசிா்ஹாட்டில் உள்ள கூடுதல் தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, 14 நாள்கள் காவலில் வைக்கப்பட்டாா். அவரை போலீஸாா் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com