ஆதார் - பான் இணைப்புக்கு ஜூன் 30 வரை அவகாசம்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு பணிகள் முடங்கியிருக்கும் நிலையில் ஆதார் - பான் எண் இணைப்புக்கு ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்


புது தில்லி: கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு பணிகள் முடங்கியிருக்கும் நிலையில் ஆதார் - பான் எண் இணைப்புக்கு மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைய இருந்த கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், 2018 - 19-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது.

வருமான வரி கணக்குத் தாக்கல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

மேலும், ஆதார் - பான் எண் இணைப்புக்கான அவகாசமும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com