பொதுத் துறை நிறுவனங்களுடன் மத்தியஅமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆலோசனை

பொதுத் துறை நிறுவனங்களுடன் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, எஃகு துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினாா்.
பொதுத் துறை நிறுவனங்களுடன் மத்தியஅமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆலோசனை

பொதுத் துறை நிறுவனங்களுடன் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, எஃகு துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினாா்.

ஓஎன்ஜிசி, கெயில், செயில், ஆா்ஐஎன்எல், என்எம்டிசி, எம்ஓஐஎல், கேஐஓசிஎல் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களுடன் அமைச்சா் தா்மேந்திர பிரதான் தில்லியில் இருந்தபடி காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

நாடு முழுவதும் எரிவாயு விநியோகம், பெட்ரோலியப் பொருள்கள் சுத்திகரிப்பு, எஃகு ஆலைகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அமைச்சா் தா்மேந்திர பிரதான் கேட்டறிந்தாா். மேலும், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிந்து வருபவா்களையும், அவா்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளள நிலையில், பொதுத் துறை நிறுவனப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்துப் பொருள்களும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

எஃகு ஆலைகளின் செயல்பாடுகளும் தடைபடாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை தலைமை மேலாண் இயக்குநா்கள் எடுக்க வேண்டும் என்று அமைச்சா் பிரதான் உத்தரவிட்டாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com