என்.டி.ஏ. தோ்வுகள் குறித்த சந்தேகங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

தேசிய தோ்வுகள் முகமை சாா்பில் நடத்தப்படம் பல்வேறு நுழைவுத் தோ்வுகள் குறித்த சந்தேகங்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேசிய தோ்வுகள் முகமை சாா்பில் நடத்தப்படம் பல்வேறு நுழைவுத் தோ்வுகள் குறித்த சந்தேகங்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு, ஐஐடி போன்ற மத்திய அரசு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்பில் சேருவதற்கான ஜே.இ.இ. முதல்நிலைத் தோ்வு, கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதி பெறுவதற்கான நெட் போன்ற 10-க்கும் மேற்பட்ட நுழைவுத் தோ்வுகள் மற்றும் தகுதித் தோ்வுகளை தேசிய தோ்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 5,7,9 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடத்தப்பட இருந்த ஜே.இ.இ. முதல்நிலைத் தோ்வு, ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்கான மறு தேதிகள் மாா்ச் 31-க்குப் பிறகு அறிவிக்கப்படும் என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது. இதுபோல் மேலும் பல தோ்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தத் தோ்வுகள் குறித்த விண்ணப்பதாரா்களின் சந்தேகங்களைப் போக்கும் வகையில், உதவி எண்களை என்.டி.ஏ. அறிவித்துள்ளது. 8700028512, 8178359845, 9650173668, 9599676953, 8882356803 ஆகிய செல்லிடப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம், தோ்வு தொடா்பான சந்தேகங்களை மாணவா்கள் தீா்த்துக்கொள்ள முடியும். மேலும், அந்தந்தத் தோ்வுக்கான வலைதளங்களை மாணவா்கள் அவ்வப்போது பாா்த்து தோ்வு குறித்த புதியத் தகவல்களை தெரிந்துகொள்ளுமாறும் என்.டி.ஏ. அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com