உத்தரகண்டில் கரோனா தொற்று ஏற்பட்ட ஐ.எஃப்.எஸ் அதிகாரி குணமடைந்தார்

உத்தரகண்ட் மாநிலத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் ஐ.எப்.எஸ் பயிற்சி அதிகாரி ஒருவர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரகண்ட் மாநிலத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட ஐ.எஃப்.எஸ் பயிற்சி அதிகாரி ஒருவர் குணமடைந்தார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தற்போது கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 11 ஆக உள்ளது. 

இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் இந்திராகாந்தி தேசிய வன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த பயிற்சி ஐ.எஃப்.எஸ் பயிற்சி அதிகாரி ஒருவருக்கு கரோனா அறிகுறிகள் இருந்துள்ளது. உடனடியாக அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

பின்னர் அவரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளார். ஆனால், பொதுவார்டில் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு அனுப்பப்படுவார் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அன்று ஸ்பெயினிலிருந்து திரும்பியதாக தகவல் வெளியானது. இதையடுத்து இந்திராகாந்தி தேசிய வன ஆராய்ச்சி நிறுவனம் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com