பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கையை உயர்த்தியது மத்திய அரசு

இந்தியாவில் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள 29 தனியார் ஆய்வகங்கள் மற்றும் 119 அரசு ஆய்வகங்கள் உள்ளன என லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கையை உயர்த்தியது மத்திய அரசு


இந்தியாவில் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள 29 தனியார் ஆய்வகங்கள் மற்றும் 119 அரசு ஆய்வகங்கள் உள்ளன என லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத் துறையின் கூடுதல் செயலர் லாவ் அகர்வால் புதன்கிழமை மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,

"கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐசிஎம்ஆர்) அங்கீகரிக்கப்பட்ட 29 தனியார் ஆய்வகங்கள் இங்கு உள்ளன. இந்த ஆய்வகங்களுக்கு நாடு முழுவதும் 16,000 சேகரிப்பு மையங்கள் உள்ளன. இங்கு குறைந்தபட்சம் ஒருநாளைக்கு 12,000 பரிசோதனைகள் மேற்கொள்ளலாம். 

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்ளும்போது ஐசிஎம்ஆர்-இன் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தனியார் ஆய்வகங்களுக்கு அப்பாற்பட்டு ஐசிஎம்ஆரால் அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆய்வகங்கள் 119 உள்ளன. தற்போதைய நிலையில், 104 ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஐசிஎம்ஆர் தகவலின்படி 15 ஆய்வகங்கள் செயல்பாட்டுக்கு வருவதற்கான நடைமுறையில் உள்ளன" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com