Enable Javscript for better performance
Corona hits Maharashtra and kills more- Dinamani

சுடச்சுட

    

    மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்து மேலும் ஒருவர் பலி

    By DIN  |   Published on : 26th March 2020 11:04 AM  |   அ+அ அ-   |    |  

    corona test

    கரோனா பாதிப்பு

     

    மும்பை: மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் பாதித்து மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

    நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று காட்டுத் தீ போன்று பரவி வரும் நிலையில், பல நாடுகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    ஏற்கெனவே, கர்நாடகம், தில்லியில் தலா ஒரு முதியவர்கள் பலியான நிலையில், இன்று மகாராஷ்டிரத்தில் மேலும் ஒரு முதியவர் பலியாகியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக மேலும் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    இதுவரை மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்று பாதித்து இதுவரை 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai