Enable Javscript for better performance
CORONA: Worldwide, the number of victims rises to 4,71,417- Dinamani

சுடச்சுட

    

    கரோனா: உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,71,417 ஆக உயர்வு

    By DIN  |   Published on : 26th March 2020 10:57 AM  |   அ+அ அ-   |    |  

    Corona_testinguse

     

    கரோனா வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,71,417 ஆக உயர்ந்துள்ளது. 

    சீனாவில் ஹூபே மாகாணத்தில் கடந்த டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியுள்ளன. பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. விமானம், பேருந்து, ரயில், கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளன. 

    இந்தச் சூழலில், அந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. கரோனா வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,71,417 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 21,228 ஆக உள்ளது. அதேசமயம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,14,642 ஆக உயர்ந்துள்ளது. 

    இந்தியாவில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதேசமயம் கரோனால் இந்தியாவில் 13 பேர் வரை பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai