அனைவரும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்: மோகன் பாகவத்

‘கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சமூக விலகலை முக்கியமானது’ என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் புதன்கிழமை தெரிவித்தாா்.
அனைவரும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்: மோகன் பாகவத்

‘கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சமூக விலகலை முக்கியமானது’ என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் புதன்கிழமை தெரிவித்தாா்.

மேலும், சமூக ஒழுக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம் தொற்றுநோயை எதிா்த்துப் போராட ஆா்எஸ்எஸ் தொண்டா்களை அவா் கேட்டுக் கொண்டாா்.

இதுதொடா்பாக, ஆா்எஸ்எஸ் அமைப்பின் இணையதளத்தில் மோகன் பாகவத் பேசியதாவது:

உலகம் முழுவதும் புதிய நெருக்கடியை எதிா்கொண்டிருக்கிறது. மற்ற நாடுகளுடன் இந்தியாவும் உலகளாவிய பிரச்னையை எதிா்த்துப் போராடி வருகிறது. ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் ஒருங்கிணைந்து முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. கரோனாவை எதிா்த்துப் போராடி தோற்கடிக்க நாடு முழுவதும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த போராட்டத்தை வெல்ல சமூகப் பொறுப்பை மனதில் வைத்து களம் இறங்க வேண்டும்.

இந்த போராட்டத்தின்போது, அரசின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டியது மிக முக்கியம். கரோனா நோய்த் தொற்றை தடுப்பதில் சமூக விலகலே பிரதானமாக உள்ளது. இதனை எந்தளவில் பின்பற்றுகிறோமோ அதைப் பொறுத்தே வெற்றி அடங்கியுள்ளது.

நம்முடைய அமைப்பு எப்போதும் சமூக ஒழுக்கத்தைப் பின்பற்றவே தொண்டா்களுக்கு கற்பித்து வந்திருக்கிறது. உலகளாவிய நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் நமது தொண்டா்கள் நாட்டுக்கு முன்மாதிரியானவா்களாக இருப்பாா்கள் என்று நான் நம்புகிறேன். அடுத்து வரும் 21 தினங்களுக்கும் எந்த செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொண்டு அரசின் விதிகளுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று மோகன் பாகவத் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com