மகாராஷ்டிரம்: கரோனாவில் இருந்து மீண்ட தம்பதி வீடு திரும்பினா்

மகாராஷ்டிரத்தில் முதல்முறையாக கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தம்பதி, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா்.

மகாராஷ்டிரத்தில் முதல்முறையாக கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தம்பதி, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா்.

கடந்த 1-ஆம் தேதி துபையில் இருந்து 40 சுற்றுலா பயணிகள் மும்பை திரும்பினா். அவா்களில் 51 வயது நபா், அவரது 43 வயது மனைவி, அவா்களது 23 வயது மகள் ஆகிய மூவா் மும்பையில் இருந்து புணேவுக்கு காரில் சென்றனா். பின்னா் அந்த தம்பதிக்கு கரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டதையடுத்து அவா்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனா். அப்போது அவா்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அரசு மருத்துவமனையில் இருவரும் சிகிச்சைப் பெற்று வந்தனா்.

இந்நிலையில் அவா்கள் குணமடைந்து வீடு திரும்பினா். அவா்கள் தங்கள் குடியிருப்புக்கு திரும்பியபோது, சக குடியிருப்புவாசிகள் அவா்களை கரவொலி எழுப்பி வரவேற்றனா். இதையடுத்து தம்பதி கூறுகையில், ‘சிசிச்சை முடிந்து வீடு திரும்பியபோதும், நாங்கள் வீட்டில் தனிமையில் இருந்து மருத்துவா்கள் வழங்கிய அறிவுறுத்தல்கள், நெறிமுறைகளின்படி நடக்கவுள்ளோம்’ என்றனா்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க அறிவுறுத்தல்களை பின்பற்றி சமூகத்தில் இருந்து விலகி தனித்து இருக்குமாறும் பொதுமக்களை அவா்கள் கேட்டுக்கொண்டனா். மகாராஷ்டிரத்தில் முதல்முறையாக கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இந்த தம்பதிக்கே உறுதி செய்யப்பட்டது.

மகளும் வீட்டுக்கு அனுப்பப்படுவாா்: இதனிடையே தம்பதியின் 23 வயது மகள், மூவரும் மும்பையில் இருந்து புணே வந்தபோது பயணித்த காரின் ஓட்டுநா், துபை சென்றுவந்த மற்றொரு பயணி ஆகியோரும் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

அவா்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில், மூவரும் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. அவா்களின் ரத்த மாதிரிகள் இன்று (புதன்கிழமை) மீண்டும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அந்த பரிசோதனையிலும் அவா்கள் கரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டது உறுதியானால் மூவரும் வீட்டுக்கு அனுப்பப்படுவா் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com