கோப்புப்படம்
கோப்புப்படம்

தனது மாநில மக்களுக்காக 18 மாநில முதல்வர்களிடம் உதவி கோரும் மம்தா பானர்ஜி

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தங்கள் மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவுமாறு 18 மாநில முதல்வர்களை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தங்கள் மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவுமாறு மாநில முதல்வர்களை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். 

மேற்குவங்கத் தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ உதவி போன்ற அடிப்படை வசதிகளை வழங்க உதவுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி 18 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அவர் எழுதிய கடிதத்தில், 'மேற்குவங்கத்தைச் சேர்ந்த பல்வேறு தொழிலாளர்கள் நாட்டின் வெவ்வேறு மாநிலத்தில் வேலை செய்து வருகிறார்கள். அவர்களின் பலர் படிக்காதவர்கள். கூலி வேலை செய்பவர்கள். கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், எங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, தங்குமிடம் வழங்கி உதவ வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் 50 முதல் 100 பேர் வரையில் இருப்பதால் உள்ளூர் நிர்வாகத்தால் அவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். நாங்கள் இப்போது அவர்களுக்கு  நேரடியாக உதவ முடியாததால் அந்தந்த மாநில அரசு சார்பில் அவர்களுக்கு உதவி செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாட பழனிசாமி, ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், கர்நாடக முதல்வர் பி.எஸ். இடியூரப்பா, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, கேரள முதல்வர் பினராசு ஹிமாஜ் விஜய் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகிய 18 மாநில முதல்வர்களுக்கு அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com