மகாராஷ்டிரத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாளிதழ்கள் மீண்டும் வெளியாகும்

மகாராஷ்டிரத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாளிதழ்களை மீண்டும் பதிப்பிக்கவும், விநியோகிக்கவும் அந்த மாநில அரசு அனுமதியளித்தது.

மகாராஷ்டிரத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாளிதழ்களை மீண்டும் பதிப்பிக்கவும், விநியோகிக்கவும் அந்த மாநில அரசு அனுமதியளித்தது.

மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் பரவலால் சமீபத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அந்த மாநிலத்தில் செய்தித்தாள் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. எனினும் அத்தியாவசிய சேவைகள் இடையூறின்றி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை மத்திய அரசு இணைத்தது. இதை கருத்தில் கொண்டு மகாராஷ்டிரத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாளிதழ்களை மீண்டும் பதிப்பிக்கவும், விநியோகிக்கவும் அந்த மாநில அரசு அனுமதியளித்தது. தொழில்துறை அமைச்சா் சுபாஷ் தேசாய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com