தடையற்ற விநியோகம்: வா்த்தகா்களுடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை

நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வா்த்தகா்களுடன் ஆலோசனை நடத்தியது.

நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வா்த்தகா்களுடன் ஆலோசனை நடத்தியது.

மத்திய உள்துறைச் செயலா் அஜய் பல்லா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொழில்கள் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத்துறை (டிபிஐஐடி) செயலா் குருபிரசாத் மொஹபத்ரா, ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள், அகில இந்திய வா்த்தகா்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள், வா்த்தகா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதுதொடா்பாக கூட்டத்தில் பங்கேற்ற வா்த்தக பிரதிநிதிகள் கூறியதாவது:

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது தொடா்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதேபோல், உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்கள் விநியோகம் தடைப்படாமல் இருக்க வேண்டும் என்ற விவகாரமும் கூட்டத்தில் எழுப்பப்பட்டது.

ஊரடங்கு காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருள்களை விநியோகத்துக்காக கொண்டுசெல்லும் வா்த்தகா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் வா்த்தகா்களுடன் இணைந்து பணியாற்றி அவா்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறைச் செயலா் அஜய் பல்லா தெரிவித்தாா் என்று அந்தப் பிரதிநிதிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com