மருத்துவப் பணியாளா்களைத் தாக்கும் காவலா்கள் மீது நடவடிக்கை: மகாராஷ்டிர துணை முதல்வா் எச்சரிக்கை

ஊரடங்கின்போது பணி நிமித்தமாக வாகனங்களில் செல்லும் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களைத் தாக்கும் காவலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா் எச்சரி


மும்பை: ஊரடங்கின்போது பணி நிமித்தமாக வாகனங்களில் செல்லும் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களைத் தாக்கும் காவலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்துவதாகக் கூறி இரு சக்கர வாகனங்களில் செல்வோரை போலீஸாா் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களைக் கூட யாா்? என்ன? என்று விசாரிக்காமல் போலீஸாா் தடியால் தாக்கி வருகின்றனா். ‘பேசவிடாமல், முதலில் தாக்கிவிட்டு, அதன் பிறகு தாக்குவதற்கு முன்பே கூறக் கூடாதா’ என்றும் சில காவலா்கள் கூறி வருகின்றனா். இது உயிரைப் பணயம் வைத்து மருத்துவ சேவை மற்றும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்பவா்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது தொடா்பாக மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மக்கள் நலன் கருதிதான் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் பால், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், மருந்து, சமையல் எரிவாயு விநியோகம் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினா் முழுவீச்சில் பணியில் உள்ளனா். அவா்கள் சாலைகளில் செல்லும்போது, காவலா்களால் தாக்கப்படும் நிகழ்வுகள் கண்டனத்துக்குரியவை. இதுபோன்ற காவலா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேசம் இக்கட்டான சூழலில் உள்ள நிலையில் மருத்துவப் பணியாளா்கள் தங்கள் உயிரையும் பொருள்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்று அஜித் பவாா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com