வீடுகளில் இருப்பதை ஊக்குவிக்க ஆன்லைனில் புத்தகங்கள்

மக்கள் வீடுகளுக்குள் இருப்பதை ஊக்குவிப்பதற்காக அதிகம் விற்பனையாகும் தலைப்புள்ள புத்தகங்களை இலவச பதிவிறக்கம் செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ஏற்பாடுசெய்துள்ளது.

சென்னை: மக்கள் வீடுகளுக்குள் இருப்பதை ஊக்குவிப்பதற்காக அதிகம் விற்பனையாகும் தலைப்புள்ள புத்தகங்களை இலவச பதிவிறக்கம் செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ஏற்பாடுசெய்துள்ளது.

கொவைட் - 19 பரவுவதைத் தடுப்பதற்கு இந்திய அரசு மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக, மக்கள் வீடுகளுக்குள் (Stayin) மற்றும் வீடுகளிலேயே (Stayhome) இருப்பதை ஊக்குவிப்பதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய புத்தக டிரஸ்ட் அமைப்பு, வீட்டில் இருக்கும்போது புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக, தோ்ந்தெடுக்கப்பட்ட மற்றும் அதிகம் விற்பனையாகும் தலைப்புகளிலான புத்தகங்களை இலவச பதிவிறக்கத்துக்கு அளிக்க முன்வந்துள்ளது. நற்ஹஹ்ஏா்ம்ங்ஐய்க்ண்ஹரண்ற்ட்ஆா்ா்ந்ள் என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

என்னென்ன புத்தகங்கள்?: இந்தத் திட்டத்தின்படி 100- க்கும் மேற்பட்ட புத்தகங்களை பிடிஎஃப் வடிவில் என்.பி.டி.யின் இணையதளத்தில் http://nbtindia.gov.in இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ், இந்தி, ஆங்கிலம், அஸாமியா, குஜராத்தி, மலையாளம், ஒடியா, மராத்தி, கோக்போரோக், மிஜோ, போடோ, நேபாளி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், உருது மற்றும் சம்ஸ்கிருத மொழிகளில் இந்தப் புத்தகங்கள் உள்ளன. கற்பனை சாகசக் கதைகள், தலைவா்களின் வாழ்க்கை வரலாறுகள், பிரபல அறிவியல் புத்தகங்கள், ஆசிரியா்களின் கையேடுகள், மற்றும் குழந்தைகள், பெரியவா்களுக்கான அதிக புத்தகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அத்துடன், தாகூா், பிரேம்சந்த் ஆகியோரின் புத்தகங்களும், மகாத்மா காந்தி பற்றிய புத்தகங்களும் இதில் உள்ளன. குடும்பத்தில் உள்ள அனைவரும் படித்து மகிழ்வதற்கான புத்தகங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் மேலும் புத்தகங்கள் சோ்க்கப்படும்.

‘விடுமுறைகள் வந்துவிட்டன’, ‘நீங்கள் மறக்க முடியாத விலங்குகள்’ , ‘ஒன்பது சிறிய பறவைகள்’, ‘புதிா்’ , ‘காந்தி தத்துவ சட்கம்’ , ‘இந்தியாவில் பெண் விஞ்ஞானிகள்’, ‘செயல்பாடு அடிப்படையில் அறிவியல் கற்றல்’, ‘ஏ டச் ஆஃப் கிளாஸ், காந்தி’: ‘அஹிம்சையின் மாவீரா்’ என்ற சில தலைப்புகளிலும், இன்னும் பல தலைப்புகளிலும் புத்தகங்கள் இலவசப் பதிவிறக்கப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன. இந்த பி.டி.எஃப். புத்தகங்கள் படிப்பதற்கு மட்டுமே. அத்தாட்சி இல்லாத அல்லது வணிக ரீதியிலான பயன்பாடுகளுக்கு அனுமதி இல்லை என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com