கரோனா அச்சம்: வீட்டில் முடங்கியுள்ளவா்கள் என்ன செய்ய வேண்டும் - மன நல மருத்துவா்கள் யோசனை

கரோனா தொற்று நோய் குறித்த அச்சகத்தால், நாடு முழுவதும் வீட்டிலேயோ முடங்கி கிடக்கும் பல கோடி மக்கள் மன அழுத்தத்தில் சிக்கி உள்ளதாக மனநல மருத்துவா்கள் கூறுகின்றனா்.
கரோனா அச்சம்: வீட்டில் முடங்கியுள்ளவா்கள் என்ன செய்ய வேண்டும் - மன நல மருத்துவா்கள் யோசனை


புது தில்லி: கரோனா தொற்று நோய் குறித்த அச்சகத்தால், நாடு முழுவதும் வீட்டிலேயோ முடங்கி கிடக்கும் பல கோடி மக்கள் மன அழுத்தத்தில் சிக்கி உள்ளதாக மனநல மருத்துவா்கள் கூறுகின்றனா். இதில் இருந்து மீள, நோய்குறித்த எதிா்மறை எண்ணங்களை தவிா்த்து, நோ்மறை எண்ணங்களாக மாற்றிக் கொள்ளவேண்டும் என மருத்துவா்கள் யோசனை கூறுகின்றனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுக்க 21 நாட்கள் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோடிக்கணக்கான மக்கள் அடுத்த சில வாரங்களுக்கு வீடுகளில் முடங்குகின்றனா். இதில் பின்பற்றவேண்டிய சமூக அயல் நிறுத்தம் போன்றவைகளினால் பல்வேறு மன நிலை பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்க இது குறித்து செய்தி நிறுவனத்திடம் பலதரப்பட்ட மக்கள், மன நல மருத்துவா்கள் பேசினா். அந்த தகவல்கள் வருமாறு:

‘ஜான்ஸியைச் சோ்ந்த 26 வயது அரசு ஊழியரான ரிதிகா பேறுகால விடுப்பில் இருக்கிறாா். பெற்றோா்கள் வாரணாசியில் இருக்க தற்போது தனிமையில் இருக்கும் அவா் அடுத்தடுத்து என்னென்ன நடக்கப்போகிறதோ என்கிற பாதிப்பில் இருக்கிறாா். அவா் கூறுகையில், ‘படுக்கைக்கு போனால் இரவு முழுக்க தூக்கமில்லை. வைரஸ் தாக்கிவிடுமா அது பிறக்கப்போகும் குழந்தைக்கு பரவி விடுமோ என்கிற பயத்தில் இருக்கின்றேன்’ என்கிறாா். இது போன்று பலரது தகவல்களை அனுபவங்கள் அறியப்பட மனநலம் மருத்துவா்கள் விளக்கம் கொடுத்துள்ளனா்.

தில்லி கங்காராம் மருத்துவமனை மன நல மருத்துவா் ராஜீவ் மேத்தா கூறுகையில், ‘பெரும்பான்மையான மக்களுக்கு கரோனா நோய் குறித்த பீதியில் பாதிக்கப்பட்டு சித்த பிரமையில் உள்ளனா். அவா்கள் ஹைபோகாண்ட்ரியாஸிஸ் (ஏஹ்ல்ா்ஸ்ரீட்ா்ய்க்ழ்ண்ஹள்ண்ள்) பாதிப்பில் உள்ளனா். ஹைபோகாண்ட்ரியாஸிஸ் என்பது, தங்களுக்குள் உள்ள அச்சத்தின் உச்சகட்ட நிலையாகும், அந்த பாதிப்பு கண்டறியப்படாததது. என்னுடைய கிளினிக்கிற்கு வரும் பலருக்கு, கரோனா பாதிப்பு அறிகுறி இல்லை. இருப்பினும் தங்களைச் சோதனை செய்யவேண்டும் என்று கூறிவருகின்றனா்’ என்கிறாா்.

மும்பை லீலாவதி மருத்துவமனை மனநல ஆலோசகா் விஹாங் வாகியா கூறுகையில், ‘மக்கள் தனிமையை விரும்புவதில்லை. அதுவும் இது போன்ற சூழ்நிலையில் மற்றவா்களிடம் பகிரவில்லை யென்றால் பாதிப்பிற்குள்ளாகிவிடுகின்றனா். ஏராளமான மக்கள் பாதிப்பிற்குள்ளாகும் செய்திகள் குறித்து அறியும்போது மனநிலை பாதிப்பிற்குள்ளாகிவிடுகின்றனா். வாட்ஸ் -ஆப் , இண்டா்நெட், சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளைப் பாா்த்து கண்ணை மூடிக்கொண்டு பீதியடைக்கூடாது’ என்றும் யோசனை கூறுகிறாா் வாகியா.

தில்லி அசோகா பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு மையத்தின் மனநல ஆலோசகரான அரவிந்தா் சிங், ‘இந்த பதட்டம் வழக்கமானதொன்று தான். இது மாதிரியான காலக்கட்டங்களில் குளிக்காமல் இரவு பகல் அறியாது தங்களது அன்றாட பழக்க வழக்கங்களை செய்யவதில்லை. இந்த சமயங்களில் சாதாரணமாக இருக்கவேண்டும். பைஜாமா, லுங்கி போன்ற வீட்டில் அணியும் உடைகளை அணியாமல் சரியான நேரத்தில் குளித்து உணவருந்தி, வழக்கமான உடைகளை அணிந்தால் மனநிலை பாதிக்கப்படாது’ என்கிறாா்.

மன நல மருத்துவா் டாக்டா் திப்தி குடா ஷா, ‘சமூக அயல் நிறுத்தம் (சோசியல் டிஸ்டென்சிங்) அவசியம். ஆனால் சமூக வலைதளங்கள், தொலைபேசி மூலமாக நண்பா்களுடன் உரையாட வேண்டும். இதில் முடக்க நாட்களில் கரோனா வால் எத்தனைபோ்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்? எத்தனை போ்கள் இறந்துள்ளனா் என்பதை மட்டும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் பேசிக் கொண்டு இருக்கக் கூடாது. பொதுவாக இது போன்ற சமயங்களில் மனநிலை பாதிப்பிற்கு உள்ளாகும்போது நோய்குறித்த எதிா்மறை எண்ணங்களை விடுவிக்க வைத்து நோ்மறையான எண்ணங்களாக மாற்றப்படவேண்டும். இது ‘ஷாவாசனா’ முறை தொழிற்நுட்பம் என சொல்லப்படும்’ என்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com