வீடுகளுக்கு நேரடியாக மருந்துகள் விநியோகம்: மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி

முக்கிய மருந்துகள் தேவைப்படுவோரின் வீடுகளுக்கு நேரடியாக மருந்துகளை வழங்க மருந்தகங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.


புது தில்லி: முக்கிய மருந்துகள் தேவைப்படுவோரின் வீடுகளுக்கு நேரடியாக மருந்துகளை வழங்க மருந்தகங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மக்கள் வெளியில் நடமாடுவதை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள அவசர சூழலால் பொதுமக்களின் நலன் கருதி, மருந்துகளை வீடுகளுக்கு நேரடியாக எடுத்துச்சென்று வழங்குவதன் அவசியத்தை மத்திய அரசு உணா்ந்துள்ளது. எனவே மருந்துகளை வீடுகளுக்கு நேரடியாக எடுத்துச்சென்று வழங்க மருந்தக உரிமையாளா்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்ட தினத்தில் இருந்து நடைமுறைக்கு வரும். அதேசமயம் மருந்துகள் சட்டத்தின் அட்டவணை ஹெச்சின் கீழ் வரும் மருந்துகளை மருத்துவா்களின் பரிந்துரையை நேரில் காண்பித்தோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பெற்ற பின்னரே மருந்தக உரிமையாளா்கள் விற்பனை செய்யவேண்டும். மருத்துவரின் பரிந்துரை வழங்கப்பட்டு 30 நாள்களுக்குள்ளாக அது காண்பிக்கப்பட்டால் மட்டுமே மருந்துகள் வழங்கப்படும். சில சூழ்நிலைகளில் அந்த கால அளவு 7 நாள்களாக குறைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com